இந்தியப் பிரதமர் அவர்கள் அலுவல் ரீதியான பயணமாக கிரீஸ் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டிற்குப் பயணம் மேற் கொள்வது இதுவே முதல் முறையாகும்.
கிரீஸ் நாட்டின் அதிபர், பிரதமர் அவர்களுக்கு அந்நாட்டின் மிக மதிப்புமிக்க கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் என்ற விருதினை வழங்கி கௌரவித்தார்.
முன்னதாக கிரீஸ் நாட்டிற்கு ஓர் உயர்நிலை அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கடைசிப் பயணம் 1983 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அந்நாட்டிற்கு மேற்கொண்டப் பயணமாகும்.