இந்தியப் பிரதமர் அவர்கள், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரது மனைவி ஜில் பிடன் ஆகியோருடனானச் சந்திப்பின் போது சில அதிகாரப்பூர்வ பரிசுகளை பரிமாறிக் கொண்டார்.
அவர்களுக்குப் பிரதமர் அளித்தப் பரிசுகளில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட ஒரு சிற்ப வேலைப்பாடுகள் செய்யப் பட்டப் பெட்டி ஒன்றும் அடங்கும்.
அந்தப் பெட்டியில் விநாயகர் சிலை, தியா (எண்ணெய் விளக்கு), மந்திரங்கள் (ஸ்லோகங்கள்) பொறிக்கப்பட்ட செப்புத் தகடு, தென்னிந்திய எள் விதைகள், ராஜஸ்தானில் கைவினை கலையால் உருவாக்கப்பட்ட 24 காரட் தங்க நாணயம் மற்றும் ஜார்க்கண்டில் கையால் நெய்யப்பட்டப் பட்டுத் துணி ஆகியவை உள்ளன.
மேலும், ‘பத்து முக்கிய உபநிடதங்கள் மற்றும் இந்து ‘தாஸ் தானம்’ ஆகியவற்றின் நகலும் ஜோ பிடனுக்கு வழங்கப் பட்டுள்ளது.
அவர் பிடனின் மனைவியான ஜில் பிடனுக்குத் தனிப்பட்ட முறையில் தனது பரிசுகளை வழங்கிய நிலையில் அவற்றில் ஒன்று இந்தியாவின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 7.5 காரட் பச்சை வைரம் ஆகும்.
இந்தப் பச்சை வைரமானது கைவினைஞர்களால் காகிதக் கூழில் உருவாக்கப்பட்டு, மிக நேர்த்தியாக வரையப்பட்ட பல அழகிய ஓவியங்களுடன் கூடிய, காகிதக்கூழால் ஆன பெட்டிக்குள் வைக்கப் பட்டிருந்தது.
பிடன் அவர்களும் நரேந்திர மோடி அவர்களுக்கு பழங்கால ஒளிப்படக் கருவி, வன விலங்குப் புகைப்படம் எடுத்தல் பற்றிய புத்தகம் மற்றும் ராபர்ட் ஃப்ரோஸ்ட் கையெழுத்திட்ட அவரது கவிதைப் புத்தகத்தின் முதல் பதிப்பின் நகல் உள்ளிட்ட பரிசுகளையும் வழங்கினார்.