தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையானது, ஜனவரி 10 முதல் 18 ஆம் தேதி வரை இந்தியப் புத்தொழில் நிறுவனங்கள் புத்தாக்க வாரத்தை நடத்துகிறது.
இது புத்தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களை ஒன்றிணைப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த வாரக் கொண்டாட்டத்தில், பத்தாவது துடிப்புமிகு குஜராத் உலக உச்சிமாநாட்டில் நடக்கும் ‘எண்ணற்ற திறன்களை வெளிக்கொணரும் புத்தொழில் நிறுவனங்கள்’ என்ற புத்தொழில் நிறுவனங்கள் குறித்தக் கருத்தரங்குகளும் அடங்கும்.
இது 2023 ஆம் ஆண்டு தேசியப் புத்தாக்க விருதுகள் மற்றும் மாநிலங்களின் 4வது புத்தொழில் நிறுவனங்கள் தரவரிசைக் கட்டமைப்பின் முடிவு அறிவிப்பு மற்றும் பாராட்டு விழா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
இணையம் வாயிலான Ask Me Anything (AMA) என்ற நேரடி அமர்வுகள் மற்றும் ‘How to Start Up’ (புத்தொழில் நிறுவனங்களை எவ்வாறு தொடங்குவது) என்பது குறித்து கவனம் செலுத்தும் பிரத்தியேக வழிகாட்டுதல் அமர்வுகள் நடத்தப்படும்.