TNPSC Thervupettagam

இந்தியப் பெருங்கடலின் விளிம்புப் பகுதி நாடுகள் சங்கத்தின் அமைச்சர்கள் மாநாடு

December 14 , 2022 586 days 277 0
  • வங்காள தேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடலின் விளிம்புப் பகுதி நாடுகள் சங்கத்தின் (IORA) 22வது அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா பங்கேற்றது.
  • இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியப் பெருங்கடலின் விளிம்புப் பகுதி நாடுகள் சங்கத்தின் ஈடுபாட்டினை மேம்படுத்துவதற்கு வழிகாட்டும் ‘இந்திய-பசிபிக் பகுதி தொடர்பான இந்தியப் பெருங்கடலின் விளிம்புப் பகுதி நாடுகள் சங்கத்தின் கண்ணோட்ட அறிக்கையினை' அமைச்சர்கள் மாநாடானது ஏற்றுக்கொண்டது.
  • மறைந்த தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா அவர்கள் 1995 ஆம் ஆண்டில் இந்திய நாட்டிற்கு வருகை புரிந்த போது இந்தியப் பெருங்கடலின் விளிம்புப் பகுதி நாடுகள் சங்கம் பற்றிய கருத்தாக்கம் ஆனது முதலில் தோன்றியது.
  • இந்தியப் பெருங்கடலின் விளிம்புப் பகுதி நாடுகள் சங்கம் என்பது இந்தியப் பெருங் கடல் பிராந்தியத்தில் பிராந்திய ஒத்துழைப்பையும் நிலையான வளர்ச்சியினையும் மேம்படுத்துவதற்காக என்று பிரத்தியேகமாக அதற்கெனவே அர்ப்பணிக்கப் பட்ட ஓர் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
  • இது இந்தியப் பெருங்கடலை ஒட்டிய 23 உறுப்பினர் நாடுகளையும் 10 பேச்சு வார்த்தைக்கான பங்குதாரர்களையும் கொண்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை வங்காள தேசம் இந்த அமைப்பின் தலைவராகப் பணியாற்ற உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்