இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை மற்றும் டெங்கு பாதிப்பின் தீவிரம்
May 14 , 2024 194 days 206 0
இந்தியப் பெருங்கடலில் கடல்-மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளுக்கும் உலகளவில் பதிவாகச் செய்யும்ம் டெங்கு தொற்றுநோய்களின் தீவிரத்திற்கும் இடையே ஒரு சாத்தியமான தொடர்பு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை பரந்த தூரங்களுக்கு இடமாற்றும் தொலைத் தொடர்புகள், பெரிய அளவிலான வளிமண்டல வடிவமைப்புகள் ஆகியவற்றினால் பிராந்திய வெப்பநிலையில் ஏற்படும் தாக்கம் காரணமாக இந்தத் தொடர்பு சாத்தியம் ஆகிறது.
டெங்கு என்பது பாதிக்கப்பட்ட ஏடிஸ் வகை கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும்.
1970 ஆம் ஆண்டிற்கு முன், ஒன்பது நாடுகளில் மட்டுமே மிகவும் கடுமையான டெங்கு பாதிப்புகள் பதிவாகியிருந்தன.
ஆனால் தற்போது இது உலக மக்கள்தொகையில் சுமார் பாதிப் பேரைப் பாதிக்கிறது என்ற நிலையில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 100-400 மில்லியன் நோய்த் தொற்றுகள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.