TNPSC Thervupettagam

இந்தியப் பெருங்கடலில் ஆழிநீர் வெப்ப ஊற்று

December 28 , 2024 25 days 82 0
  • இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பிலிருந்து 4,500 மீட்டர் ஆழத்தில் தற்போது செயல் பாட்டில் உள்ள ஆழிநீர் வெப்ப ஊற்று ஒன்று இருப்பதை இந்தியாவின் ஆழ்கடல் ஆய்வு திட்டம் கண்டறிந்துள்ளது.
  • NIOT மற்றும் NCPOR ஆகியவை கடலில் 4,500 மீட்டர் கீழே உள்ள செயல்பாட்டில் உள்ள ஆழிநீர் வெப்ப ஊற்றின் முதல் புகைப்படத்தை எடுத்துள்ளன.
  • ஆழிநீர் வெப்ப ஊற்றுகள் பெருங்கடலின் தரைப் பகுதியில் உள்ள வெந்நீர் ஊற்றுகள் போன்றவையாகும்.
  • அவை கண்டத் தட்டுகள் ஒன்றையொன்று பிரிந்து செல்லும் மத்தியப் பெருங்கடல் முகடுகளில் உருவாகின்றன.
  • பூமியின் மூடகத்தில் இருந்து வெளி வரும் பாறைக் குழம்புகள் அந்த இடைவெளியை நிரப்புவதற்காக மேலெழும்பி, குளிர்ந்து புதிய கண்ட மேலோடு மற்றும் எரிமலை மலைத் தொடர்களை உருவாக்குகிறது.
  • கடல் நீர் ஆனது கண்ட மேலோட்டில் உள்ள விரிசல்களுக்குள் கசியும் போது, ​​அது இந்த பாறைக் குழம்பினால் மிக வெப்பமடைந்து, கரைந்த தாதுக்களைக் கொண்ட சுடுநீர் பிழம்புகளை வெளியேற்றுகிறது.
  • இதில் வெந்நீரானது குளிர்ந்த கடல்நீரைச் சந்திப்பதால், இந்தக் கனிமங்கள் திடமாகி, துவாரங்களைச் சுற்றி புகைபோக்கி போன்ற அமைப்புகளை உருவாக்குகின்றன.
  • கிழக்குப் பசிபிக் பெருங்கடலில் உள்ள கேலபோகஸ் என்ற பிளவில் 1977 ஆம் ஆண்டில் முதலாவது ஆழிநீர் வெப்ப ஊற்று கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்