TNPSC Thervupettagam

இந்தியப் பெருங்கடலில் மாபெரும் ‘புவி ஈர்ப்புத் துளை’

July 12 , 2023 375 days 243 0
  • இந்தியப் பெருங்கடலில் உள்ள மாபெரும் புவி ஈர்ப்புத் துளை குறித்த இரகசியங்களை இந்திய அறிவியல் கழக ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
  • இது இந்தியப் பெருங்கடல் புவிக்கோள தாழ்நிலை (IOGL) என அழைக்கப் படுகிறது.
  • இது 1948 ஆம் ஆண்டில், நெதர்லாந்து நாட்டின் புவிசார் இயற்பியலாளர் பெலிக்ஸ் ஆன்ட்ரிஸ் வெனிங் மெய்னெஸ் என்பவரால் இலங்கைக்குத் தெற்கே, கண்டுபிடிக்கப் பட்டது.
  • இது இரண்டு மில்லியன் சதுர மைல்களை உள்ளடக்கியதோடு மற்றும் பூமியின் மேல் அடுக்கிற்குக் கீழே சுமார் 600 மைல் ஆழத்தில் அமைந்துள்ளது.
  • இந்த மாபெரும் தாழ்நிலையானது, சராசரியை விட கணிசமான அளவில் குறைந்த ஈர்ப்பு விசையைக் கொண்டுள்ளது.
  • இதன் மேல் கவச அடுக்கில் இருந்து உள்கவச அடுக்கு வரை மிருதுவானப் பொருட்கள் இருப்பதால், இந்தப் பகுதியில் ஈர்ப்பு விசை குறைவாக உள்ளது.
  • இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் உள்ள இந்தக் கவச அடுக்கு அமைப்பானது, நீண்ட காலத்திற்கு முன்னதாக அழிந்து போன டெத்திஸ் என்ற பெருங்கடலின் கடற்பரப்பின் எஞ்சியப் பகுதிகளால் உருவாக்கப் பட்டிருக்கலாம் என கருதப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்