இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், இந்தியப் பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பினை (IndOOS) மீண்டும் செயல்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளன.
இது வானிலை முன்னெச்சரிக்கைகளுக்காக உயர் தெளிவுத் திறன் கொண்ட கடல் சார் மற்றும் வளிமண்டலத் தரவுகளைச் சேகரிப்பதற்காக வேண்டி தொலைதூர கடல் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள 36 பிணைக்கப்பட்ட மிதவை சாதனங்களின் வலை அமைப்பாகும்.
இந்த மிதவைச் சாதனங்களானது, ஆப்பிரிக்க-ஆசிய-ஆஸ்திரேலியப் பருவமழைப் பகுப்பாய்வு மற்றும் கணிப்பு (RAMA) திட்டத்திற்கான ஆராய்ச்சிக்காக பிணைக்கப் பட்ட மிதவைச் சாதனங்களின் தொடரமைப்பின் ஒரு பகுதியாக உள்ளன.
பல்வேறு புயல் எச்சரிக்கைகள், பல்வேறு புயல் உருவாக்க எச்சரிக்கைகள், பருவமழை முன்னறிவிப்புகளுக்கான பல்வேறு கட்ட ஆரம்பச் சூழ்நிலைகள் மற்றும் பருவநிலை முன்னறிவிப்புகள், சுனாமி எச்சரிக்கைகள் மற்றும் மிக தீங்கு விளைவிக்கும் பாசிப் பெருக்கத்தினைக் கண்டறிதல் போன்ற செயல்பாடு சார்ந்தச் சேவைகளுக்கு இதன் கண்காணிப்பு முடிவுகள் அவசியமாகும்.