TNPSC Thervupettagam

இந்தியப் பெருங்கடல் சூரை மீன் ஆணையம்

December 1 , 2023 233 days 238 0
  • மீன்வளத்துறை, மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள அமைச்சகம் ஆனது, இந்தியப் பெருங்கடல் சூரை மீன் ஆணையத்தின் (IOTC) தரவு சேகரிப்பு மற்றும் புள்ளியியல் (WPDCS19) தொடர்பான 19வது பணிக்குழுவை அமைத்து வருகிறது.
  • இது இந்தியப் பெருங்கடல் சூரை மீன் ஆணையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்தியாவின் மீன்வளத் துறையால் நடத்தப்படும் ஒரு முக்கிய சந்திப்பு ஆகும்.
  • இது உலகம் முழுவதிலும் உள்ள சூரை மீன்வளத் துறையில் புகழ்பெற்ற அறிவியலாளர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைக்கும்.
  • IOTC தற்போது 31 ஒப்பந்த நாடுகளையும், லைபீரியா மற்றும் செனகல் ஆகிய இரண்டு ஒத்துழைப்பு சார்ந்த ஒப்பந்தம் சாரா நாடுகளையும் கொண்டுள்ளது.
  • சூரை மீன் வர்த்தகம் மட்டும், வருடாந்திர வர்த்தக மதிப்பில் 41 பில்லியன் டாலர் (2018 ஆம் ஆண்டில்) மதிப்பினை கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்