இந்தியப் பெருங்கடல் பல்லுயிர்ப் பெருக்க பெருங்கடல் தகவல் அமைப்பு
September 13 , 2024 74 days 78 0
கடல் வாழ் வளங்கள் மற்றும் சூழலியல் மையம் (CMLRE) ஆனது, கொச்சியில் இந்தியப் பெருங்கடல் பல்லுயிர்ப் பெருக்க தகவல் வழங்கீட்டு அமைப்பு (IndOBIS) குறித்த தேசிய அளவிலானப் பயிலரங்கத்தினை நடத்தியது.
IndOBIS என்பது உலகளாவியப் பெருங்கடல் பல்லுயிர்ப் பெருக்கத் தகவல் வழங்கீட்டு அமைப்பின் (OBIS) இந்தியப் பிராந்தியத்திற்கான முனையமாகும்.
உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களால் பங்காற்றப்பட்ட ஆயிரக்கணக்கான தரவுத் தொகுப்புகளிலிருந்து பெறப்பட்ட சுமார் மில்லியன் கணக்கான பதிவுகளைக் கொண்ட கடல் இனங்கள் பற்றிய தகவல்களின் மிகப்பெரிய உலகளாவிய களஞ்சியங்களில் OBIS ஒன்றாகும்.
இது உலகப் பெருங்கடல்கள் முழுவதும் காணப்படும் இனங்களின் பரவல், அவற்றின் உருவாக்கம், வாழ்விடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அளவுருக்கள் பற்றிய பல தரவுகள் உள்ளிட்ட விரிவான தகவல்களை வழங்குகிறது.