TNPSC Thervupettagam

இந்தியப் பெருந்தகைமை குறித்த அறிக்கை 2025

March 3 , 2025 7 hrs 0 min 38 0
  • சமூகத் துறை நிதியளிப்பு ஆனது கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 13% அதிகரித்து 2024 ஆம் நிதியாண்டில் 25 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
  • சமூகத் துறையளிப்பு ஆனது 2029 ஆம் நிதியாண்டில் 45 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நிதி ஆயோக் அமைப்பானது, இத்துறைக்குச் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டின் பெரு அறிக்கையின் படி, இந்த நிதி இடைவெளி ஆனது 2029 ஆம் நிதி ஆண்டில் 16 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்.
  • இதில் சமூகச் செலவினங்களானது, மொத்த நிதியில் சுமார் 95% பங்கினைக் கொண்ட பொதுத் துறையால் பெரும்பாலும் வழங்கப்படுகின்றன.
  • பொதுத்துறை நிதியளிப்பு ஆனது, 2024 ஆம் நிதியாண்டில் 23 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்பதோடு இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 43 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுத்துறையின் செலவினம் ஆனது 2024 ஆம் நிதி ஆண்டில் 7.9% ஆக இருந்தது. இது 2019 ஆம் நிதியாண்டில் 6.8% ஆக இருந்தது.
  • 2024 ஆம் நிதியாண்டில், தனியார் செலவினமானது சுமார் 1.31 லட்சம் கோடி ரூபாயை எட்டியது என்ற நிலையில் இது 2023 ஆம் நிதியாண்டில் இருந்ததை விட வெறும் 7% அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்