TNPSC Thervupettagam

இந்தியப் பேரிடர் வரைபடம்

November 11 , 2017 2599 days 1246 0
  • தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையமும் (NDMA _ National Disaster Management Authority), ஸீட்ஸ் இன் இந்தியா  (Seeds in India) எனும் இலாப நோக்கமற்ற நிறுவனமும் இயற்கை பேரிடர்களின் போது மீட்பு மற்றும் தணிப்பு போன்ற பேரிடர் பதிலெதிர்ப்பு நடவடிக்கைகளை மிகுந்த திறமோடு மேற்கொள்ள உதவிடும் வகையில், இந்திய பேரிடர் வரைபட கருவிகளை அந்நிறுவனங்களுக்கு வழங்க பேஸ்புக் (முகநூல்) நிறுவனம் அந்த அமைப்புகளுடன் கூட்டிணைவை  ஏற்படுத்தியுள்ளது.
  • இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பேரிடர் மேலாண்மை (Disaster Management) மற்றும் பேரிடர் பதிலெதிர்ப்பு (Disaster response) நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்தால் முதன்முறையாக நடத்தப்பட்ட பேரிடர் பதிலெதிர்ப்பு மாநாட்டில் (Disaster Response Summit) இந்த புதிய வரைபட கருவிகள் வெளியிடப்பட்டன.
  • ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டத்தின் படி (UNDP – United Nations Development Programme) இந்தியா இயற்கை பேரிடர்களால் மோசமாகப் பாதிக்கப்படும் உலகின் மூன்றாவது நாடாகும்.
  • இயற்கைப் பேரிடர்களால் அதிகப் பாதிப்பிற்குள்ளாகும் அஸ்ஸாம் மற்றும் உத்தரகாண்டில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் பயன்படுத்தப்படும்.
  • உலகம் முமுவதும் இந்த ஆண்டு ஜீன் மாதத்தில் பேரிடர் வரைபடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. முகநூல் பயன்பாட்டாளர்களால் முகநூலில் பகிரப்படும் இடஞ்சார்ந்த தகவல்கள் திரட்டப்பட்டு இத்திட்டத்தினில் பயன்படுத்தப்படும். அமெரிக்கா மற்றும் சிலி போன்ற நாடுகளில் இத்திட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த திட்டமானது ஸீட்ஸ் இன் இந்தியா  அமைப்பால் செயல்படுத்தப்படும். தங்கள் உள்ளூர் பகுதிகளின் பேரிடர் கால உண்மை நேரத் தகவல்களையும், முதல் நிலை தகவல்களையும் வழங்குவதற்காக தன்னார்வலர்களின் ஓர் பிணைய வலையமைப்பு இத்திட்டத்தின் கீழ் உண்டாக்கப்படும்.
  • மேலும் பேஸ்புக் நிறுவனமானது நம் நாட்டின் சோதனை திட்டமான ஆப்டா சமச்சர் கர்யகர்தா (Aapda Samachar Karyakarta-Disaster Information Volunteers) எனும் பேரிடர் தன்னாவலர்களின் தகவல்கள் திட்டத்திற்கும் ஆதரவு அளித்து வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்