பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development - OECD) என்பது பாரிஸை தளமாகக் கொண்ட அரசாங்கங்களுக்கு இடையிலான ஒரு பொருளாதார அமைப்பாகும்.
OECD அமைப்பின் பொருளாதார ஆய்வுகளின் 2019 பதிப்பு: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019-20 ஆம் நிதியாண்டில் 5.8 சதவீதமாக உயரும் என்று இந்திய அறிக்கையானது கணித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6.21 சதவீதமாகவும் 2021 ஆம் ஆண்டில் 6.4 சதவீதமாகவும் இருக்கும் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
தரமான வேலைகளை உருவாக்குதல், தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பின்மை மற்றும் வருமான ஏற்றத் தாழ்வு ஆகியவை இந்தியாவில் சவால்களாகவே உள்ளன என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது.
மேலும் சுகாதாரம் மற்றும் கல்விக்காக பொதுச் செலவுகளில் அதிக முதலீடு செய்வது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (மொத்த உள்நாட்டு உற்பத்தி) பொதுக் கடனுக்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடைபிடிப்பது போன்றவையும் சவால்களாக உள்ளன என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
வரவு - செலவுத் திட்டப் பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்ச்சியான கடன்களின் வெளிப்படைத் தன்மையை நிர்வகிக்க ஒரு சுயாதீனமான நிதிக் குழுவை உருவாக்க இந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.