TNPSC Thervupettagam

இந்தியப் பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கை

February 16 , 2024 153 days 260 0
  • மத்திய நிதியமைச்சர் அவர்கள், இந்தியப் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.
  • இது நிதி அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டது.
  • இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்தின் 10 ஆண்டு காலப் பொருளாதாரச் செயல்திறனைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தின் 10 ஆண்டு கால ஆட்சியுடன் ஒப்பிடுகிறது.
  • 2014 ஆம் ஆண்டில் NDA அரசாங்கம் பதவியேற்ற போது இருந்த ஆளுகைத் திறன், பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளின் தன்மை மற்றும் பரவலை நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் இது தெரிவிக்க முயல்கிறது.
  • 2014 ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்தின் நலத்தினை மீட்டெடுக்க (NDA) அரசாங்கம் எடுத்த கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி இது தெரிவிக்கிறது.
  • இது மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
    • முதல் பகுதியானது, 10 ஆண்டுகால UPA ஆட்சியின் போதான பேரியப் பொருளாதார நிலைமைகள் குறித்து விவாதிக்கிறது.
    • இரண்டாவது அறிக்கையானது UPA அரசாங்கத்தின் பல்வேறு ஊழல் மோசடிகளின் தற்போதைய நிலை குறித்தத் தகவல்களை வழங்குகிறது.
    • மூன்றாவது பகுதியானது, NDA அரசாங்கம் எப்படி பொருளாதாரத்தை மாற்றி அமைத்தது என்பதைக் காட்டுகிறது.
  • 2004 ஆம் நிதியாண்டில் 31% ஆக இருந்த மொத்தச் செலவினங்களின் சதவீதமாக (வட்டிக் கொடுப்பனவுகளைத் தவிர்த்து) குறிப்பிடப்படும் மூலதனச் செலவினமானது 2014 ஆம் நிதியாண்டில் 16% ஆக பாதியாகக் குறைந்தது (இந்த விகிதம் நடப்பு ஆண்டில் 28% ஆக உள்ளது).
  • அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது 2004 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 17 மாதங்கள் வரையிலான இறக்குமதிகளுக்கு நிதியளிக்கத் தேவையானதாக இருந்த நிலையில், இது 2013 ஆம் ஆண்டில் 6 மாதங்களுக்கு மேலான காலம் வரையில் நிதி அளிப்பதற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.
  • 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, அந்நியச் செலாவணி கையிருப்பு ஆனது 10.6 மாத இறக்குமதிக்கு நிதியளிப்பதற்குப் போதுமானதாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்