TNPSC Thervupettagam

இந்தியர்களின் நாடுகடத்தல்கள் 2025

January 27 , 2025 4 days 49 0
  • அமெரிக்க நாட்டில் சட்ட விரோதமாக வசிக்கும் சுமார் 18,000 புலம்பெயர்ந்தோரை இந்திய அரசாங்கம் அடையாளம் கண்டு, அவர்களை நாடு திரும்பச் செய்வதற்கு என திட்டமிட்டு உள்ளது.
  • அமெரிக்காவில் சுமார் 725,000 ஆவணமற்ற புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ள நிலையில் இது மெக்சிகோ மற்றும் எல் சால்வடார் ஆகிய நாட்டுப் புலம் பெயர்ந்த குழுவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய குழுவாக உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அனைத்து H-1B நுழைவு இசைவுச் சீட்டுகளில் சுமார் 75% பேர் இந்தியர்களாக இருந்தனர்.
  • குடியேற்றச் சட்டத்தினை மீறியதற்காக அமெரிக்காவிலிருந்து குடியுரிமை பெறாத ஒருவரை வெளியேற்றும் செயல்முறையே நாடு கடத்தல் ஆகும்.
  • குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற, பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும்; அல்லது அவர்களின் நுழைவு இசைவுச் சீட்டு விதிமுறைகளை அங்கு மீறும் குடிமக்கள் அல்லாதவர்களை அமெரிக்கா தடுப்புக் காவலில் வைத்து நாடு கடத்தலாம்.
  • விசாரணை அல்லது நாடு கடத்தலுக்கு மிக முன்னதாக ஒரு வெளிநாட்டினர் தடுப்புக் காவல் மையத்தில் காவலில் வைக்கப்படலாம்.
  • 2019 ஆம் ஆண்டில், சுமார் 1,616 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர் என்ற நிலையில் இது 2020 ஆம் ஆண்டில் 2,312 ஆக அதிகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்