TNPSC Thervupettagam

இந்தியர்களுக்கான புதிய ஷெங்கன் விசா விதிகள்

April 30 , 2024 208 days 180 0
  • ஐரோப்பிய ஒன்றியமானது சமீபத்தில் இந்தியக் குடிமக்களுக்கு ஏற்றவாறு தற்போது புதுப்பிக்கப் பட்ட நுழைவு இசைவுச் சீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தப் புதிய விதி முறையானது, இந்தியர்கள் நீண்ட காலத்திற்கு, பல்-நுழைவு ஷெங்கன் நுழைவு இசைவுச் சீட்டுக்களைப் பெற வழி வகுக்கிறது.
  • பொதுவாக ஒரு ஷெங்கன் நுழைவு இசைவுச் சீட்டு, 180 நாட்கள் வரையிலான காலக் கெடுவிற்குள் 90 நாட்கள் வரை குறுகிய காலம் தங்குவதற்கு அனுமதிக்கிறது.
  • இந்தியப் பயணிகள் தற்போது இரண்டு ஆண்டுகால ஷெங்கன் நுழைவு இசைவுச் சீட்டினைப் பெறலாம் என்ற நிலையில் முன்னதாக குறுகிய காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் வகையிலேயே கிடைக்கப் பெற்றது என்பதால் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும்.
  • இந்த நீட்டிக்கப்பட்ட இரண்டு ஆண்டு கால நுழைவு இசைவுச் சீட்டிற்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் முந்தைய மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு ஷெங்கன் நுழைவு இசைவுச் சீட்டுக்களைப் பெற்று அவற்றை சரியான முறையில் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்