TNPSC Thervupettagam

இந்தியல் குற்றவியல் சட்ட மசோதாக்கள் குறித்து நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை

November 19 , 2023 245 days 241 0
  • குற்றவியல் மற்றும் நடைமுறைச் சட்டங்களை மாற்றியமைக்க முயலும் மூன்று மசோதாக்கள் பற்றிய அறிக்கைகள் மாநிலங்களவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.
  • அந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் – பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மசோதா, 2023, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா (BNSS) மசோதா, 2023 மற்றும் பாரதிய சக்ஷ்யா (BS) மசோதா, 2023 ஆகியவை முறையே இந்திய தண்டனைச் சட்டம், 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம்,1898 மற்றும் இந்தியச் சாட்சியச் சட்டம், 1872 ஆகியவற்றிற்குப் பதிலாக இயற்றப்படும்.
  • இந்த மசோதாக்கள் ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப் பட்டு, உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் மதிப்பாய்விற்கு அனுப்பப்பட்டன.
  • கடந்த வாரம் வெளியிடப்பட்ட நாடாளுமன்றக் குழு அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா மசோதாவானது மரண தண்டனை விதிக்கப் பட வேண்டிய குற்றங்களின் எண்ணிக்கையை 11லிருந்து 15 ஆக உயர்த்தி உள்ளது.
  • இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 353வது பிரிவானது, அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை வழங்கச் செய்கிற நிலையில்  நாடாளுமன்றக் குழுவானது அதை ஒரு வருடமாக குறைக்க முற்பட்டுள்ளது.
  • கலப்படம் செய்யப்பட்ட உணவு அல்லது பானங்களை விற்பனை செய்பவர்களுக்கு குறைந்த பட்சம் ஆறு மாத சிறைத் தண்டனையும், குறைந்தபட்சம் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்