TNPSC Thervupettagam
November 23 , 2017 2534 days 1030 0
  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவையானது மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஐரோப்பிய வங்கியில் (EBRD – European Bank for Reconstruction & Development) இந்தியா உறுப்பினராவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை இந்தியா உறுப்பினர் ஆவதற்குத் தேவையான அனைத்து அவசிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
  • EBRD-ல் இந்தியா உறுப்பினராகுதலானது சர்வதேச அளவில் இந்தியாவின் நிலையை மேம்படுத்துவதோடு, இந்தியாவின் பொருளாதார நலன்களை மேம்படுத்தவும் உதவும்.
  • இந்தியா, உலக வங்கி (World Bank-WB), ஆசிய மேம்பாட்டு வங்கி (Asian Development Bank-ADB), ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கி (African Development Bank-ADB), ஆசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank -AIIB) புதிய மேம்பாட்டு வங்கி (New Development Bank -NDB) போன்றவற்றில் உறுப்பினராக உள்ளது.
  • இதன் மூலம் இந்தியாவின் முதலீட்டு வாய்ப்புகளுக்கு ஊக்கம் கிடைப்பதோடு, இந்தியர்கள் ஐரோப்பிய மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியில் பணிபுரியவும் வாய்ப்புகள் உண்டாகும்.
EBRD
  • EBRD ஓர் சர்வதேச நிதியியல் நிறுவனமாகும்.
  • இது 1991ல் தோற்றுவிக்கப்பட்டது.
  • இதன் தலைமையகம் – இலண்டன்
  • 65 நாடுகளாலும், இரு ஐரோப்பிய யூனியனின் நிறுவனங்களாலும் இவ்வங்கி நடத்தப்படுகிறது.
  • இவ்வங்கியில் அமெரிக்க பெரும் பங்குதாரராக உள்ளது.
  • EBRD-ல் ஐரோப்பிய நாடுகளைத் தவிர பிற கண்டத்தைச் சார்ந்த நாடுகளும் உறுப்பினராக உள்ளன.அவையாவன
    • வட அமெரிக்கா ― கனடா, அமெரிக்கா
    • ஆப்பிரிக்கா ― மொராக்கோ
    • ஆசியா ―  ஜப்பான், சீனா, தென் கொரியா, ஆஸ்திரேலியா
  • உறுப்பு நாடுகளில் செயல்படும் தனியார் துறைகளை மேம்படுத்துவதே EBRD வங்கியின் முக்கிய செயல்பாடாகும்.
  • EBRD வங்கியில் உறுப்பினராவதற்கு குறைந்தபட்சம் ஆரம்பகட்ட முதலீடாக ஒரு மில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய வேண்டும்.
  • EBRD வங்கியும் ஐரோப்பிய முதலீட்டு வங்கியும் (European Investment Bank) ஒன்றல்ல. வெவ்வேறானவை.
  • இது முழுவதும் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களால் ஐரோப்பிய யூனியனின் கொள்கைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்