கடல்சார் போக்குவரத்திற்கான பல்வேறு உதவிகளுக்கான ஒரு சர்வதேச அமைப்பின் (IALA) துணைத் தலைமைப் பொறுப்பிற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
இந்தியா 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் IALA சபையின் கூட்டத்தையும், 2027 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் IALA மாநாடு மற்றும் பொதுச் சபையையும் மும்பையில் நடத்தவுள்ளது.
IALA ஆனது 1957 ஆம் ஆண்டில் ஓர் அரசு சாரா அமைப்பாக (NGO) நிறுவப்பட்டது.
இது கடல்சார் துறையில் அவற்றின் அனுபவங்களையும், சாதனைகளையும் மிக நன்கு பரிமாறிக் கொள்ளவும், ஒப்பிட்டுப் பார்க்கவும் வாய்ப்பளிக்கிறது.