இந்தியாவில் அஞ்சல் அலுவலக கட்டண வங்கி ஏப்ரல் 2018-ல் தனது சேவையைத் தொடங்கியது.
இந்திய அஞ்சல் கட்டண வங்கி என்று அறியப்படும் இது நாட்டின் மிகப் பெரிய கட்டண வங்கியாகும்.
650 கட்டண வங்கிகள் நாட்டிலுள்ள55 லட்சம் அஞ்சல் அலுவலகங்களுக்கு உதவி புரியும்.
இதன் கீழ், தபால்காரர் மற்றும் ஊரக அஞ்சல் அலுவலகங்களால் நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் டிஜிட்டல் கட்டண சேவைகள் வழங்கப்படும்.
2015 ஆம் ஆண்டு, RBI ஆனது கட்டண வங்கிகளாக செயல்படுவதற்காக இந்திய தபால் துறைக்கு கருத்தியல் முறையிலான முன்மொழிவை வழங்கியது. இந்த வங்கியின் கருத்துரு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு.ரகுராம் ராஜன் அவர்களால் உருவாக்கப்பட்டது.