இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து வாஷிங்டனில் பாதுகாப்பு தொடர்பான ஒரு உரையாடலை நடத்தின.
இந்த இரு நாடுகளின் இரண்டாவது 2 + 2 உரையாடல் இதுவாகும்.
இந்த இரு நாடுகளும் விண்வெளி ஆய்வு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
இந்தியாவின் ஜல் சக்தித் துறை அமைச்சகம் மற்றும் அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் ஆகியவற்றிற்கு இடையே நீர் வளங்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமானது கையெழுத்திடப்பட இருக்கின்றது.
முதலாவது 2 + 2 உரையாடலானது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புது தில்லியில் நடத்தப் பட்டது.