TNPSC Thervupettagam

இந்தியா - ஆசியான் முக்கூட்டு வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பு

July 14 , 2019 1834 days 590 0
  • விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டுறவு (Regional Comprehensive Economic Partnership - RCEP) மீதான அதிகாரப் பூர்வமற்ற கலந்தறிதலுக்காக இந்தியா - ஆசியான் முக்கூட்டு வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பு புது தில்லியில் நடத்தப் பட்டது.
  • இந்தச் சந்திப்பானது மத்திய வணிக & தொழில் துறை மற்றும் இரயில்வே துறை அமைச்சரான பியூஷ் கோயலால் கலந்து கொள்ளப்பட்டது.
  • இந்தியப் பொருட்களுக்கு சீனாவுடனான சந்தை அணுகல் பிரச்சினைகள் மிகக் குறிப்பாக சிக்கலானவை என்று அவர் அங்கு வலியுறுத்தினார்.
  • RCEP என்பது பின்வருவனவற்றிற்கிடையே பரிந்துரைக்கப்பட்ட ஒரு வர்த்தகத் தடையற்ற ஒப்பந்தமாகும்.
    • தென்கிழக்கு ஆசிய நாடுகள் கட்டமைப்பின் (Association of Southeast Asian Nations - ASEAN) 10 உறுப்பினர் நாடுகள் (புருனேய், கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம்).
    • ஆசியாவில் தற்பொழுதுள்ள வர்த்தகத் தடையற்ற ஒப்பந்தங்களைக் கொண்ட இந்தோ - பசிபிக் நாடுகள் (சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து).
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்