TNPSC Thervupettagam

இந்தியா – ஆப்கன் 2-வது சரக்கு விமானம்

December 28 , 2017 2395 days 759 0
  • இந்தியாவின் மும்பையையும், ஆப்கனின் காபூல் நகரையும் வர்த்தக ரீதியாக இணைப்பதற்கான 2-வது ஆப்கன் – இந்தியா சரக்கு விமான சேவை ஆப்கனின் காபூலில் உள்ள ஹமீத் கர்ஜாய் விமான நிலையத்தில் முறையாக துவங்கப்பட்டுள்ளது.
  • ஆப்கனில் சமீபத்திய நிலையில், அறுவடை செய்யப்பட்ட புத்துணர்வுடைய (fresh) பழங்கள் மற்றும் மருத்துவத் தாவரங்களை ஆப்கனிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பதற்காக இந்த விமான சரக்கு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  • 2017-ஆம் ஆண்டின் ஜூலையில் இந்தியாவின் புதுடெல்லி மற்றும் ஆப்கனின் காபூலிற்கு இடையே துவங்கப்பட்ட இதே நோக்கமுடைய முதல் விமான சரக்கு சேவை வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை தொடர்ந்து, தற்போது புதிதாக இரண்டாவது விமான சரக்கு சேவை துவங்கப்பட்டுள்ளது.
  • இதற்கு முன் இரு நாடுகளுக்கும் இடையே பாகிஸ்தான் வழியாக நிலத்திலான போக்குவரத்து மூலமாக நடைபெற்ற வர்த்தகத்திற்கு பாகிஸ்தான் திடீரென்று தடை விதித்ததை தொடர்ந்து அத்தடங்கல்களை வெல்லும் வகையில் இந்தியாவிற்கும் ஆப்கானிற்கும் இடையே சரக்கு விமான வர்த்தக சேவை துவங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்