இந்தியா – ஆப்கானிஸ்தான் யுக்தி முறை நட்புக்குழு கூட்டம் – 2வது பதிப்பு – புது தில்லி
September 12 , 2017 2675 days 919 0
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான யுக்தி முறை நட்புக்குழுக் கூட்டத்தின் 2வது மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது. இது 2011ம் ஆண்டு இருதரப்பு யுக்தி முறை நட்பு ஒப்பந்தத்தின் படி ஏற்படுத்தப்பட்டது.
இந்தியாவின் வெளியுறத்துறை மந்திரி திருமதி. சுஸ்மா சுவராஜீம் இஸ்லாமிய ஆப்கானிஸ்தான் குடியரசின் வெளியுறவுத் துறை மந்திரி சலாலுதீன் சப்பானியும் இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர்.
இந்த கூட்டம் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளை விவாதித்தது. இந்தக் கூட்டத்தின் முக்கிய முடிவுகளாக அரசியல் மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம், வியாபாரம் மற்றும் முதலீடு, வளர்ச்சி மேம்பாட்டு ஒத்துழைப்பு, மனித வளர்ச்சி மேம்பாடு, கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகிய நான்கு செயற்குழுக்களின் பணிகளை மறுபார்வையிடுவதலாகும்.