தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி ஆலோசக சேவை வங்கியுடன் இணைந்து நிலத்தால் சூழப்பட்ட ஆப்பிரிக்க நாடான மலாவியில் இந்திய-ஆப்பிக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தை (IAIARD - India-Africa Institute of Agriculture and Rural Development - IAIARD) இந்தியா அமைக்கவிருக்கிறது.
IAIARD ஆனது மலாவி மற்றும் இதர ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய ஆப்பிரிக்க நிறுவனமாக விளங்கும். மேலும் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது மனித வளங்கள் மற்றும் திறன் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பயிற்சி பெறவிருக்கின்றனர்.
இது வேளாண் நிதி மற்றும் நுண் நிதியியல் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்தவிருக்கிறது.
இந்தியாவால் ஆப்பிரிக்க நாட்டில் உருவாக்கப்பட்ட இது போன்ற வகையைச் சேர்ந்த முதலாவது நிறுவனம் இதுவாகும்.