TNPSC Thervupettagam

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

November 28 , 2022 602 days 278 0
  • இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்புதலைத் தொடர்ந்து, இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (AI-ECTA) ஆனது தற்போது பரஸ்பரமாக ஒப்புக் கொள்ளப் பட்ட தேதியிலிருந்துச் செயல்பாட்டிற்கு வரும்.
  • இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தமானது ஆஸ்திரேலியச் சந்தையில் இந்தியாவின் 6,000 மாபெரும் துறைகளுக்கு வரியில்லா அணுகலுக்கான வாய்ப்பினை வழங்கும்.
  • ஜவுளி, தோல், அறைகலன்கள், நகைகள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
  • 2021-22 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு 8.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
  • இந்தக் காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு மேற்கொள்ளப் பட்ட இறக்குமதியின் மதிப்பு 16.75 பில்லியன் டாலராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்