TNPSC Thervupettagam

இந்தியா- உலக சுகாதார நிறுவனம் ஒப்பந்தம்

April 28 , 2018 2406 days 869 0
  • இந்தியா மற்றும் உலக சுகாதார நிறுவனத்திற்கு (World Health Organisation -WHO) இடையேயான ஒப்பந்த குறிப்பாணைக்கு (Memorandum of Agreement -MoA) மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய அலுவலகமானது இந்தியாவில் உள்ள தனது அலுவலகத்தின் மூலம் உலக சுகாதார நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது.
  • இந்த இருதரப்பு ஒப்பந்த குறிப்பாணை ஆனது 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் புது டெல்லியில் கையெழுத்திடப்பட்டது.
  • இந்தியா மற்றும் உலக சுகாதாரத்திற்கு இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதே இந்த ஒப்பந்த குறிப்பாணையின் நோக்கமாகும்.
  • இந்தியாவில் உள்ள மக்களுடைய பொது சுகாதார நிலையை அதிகரிப்பதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.
  • உலக சுகாதார நிறுவனமானது 1948-ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது.
  • உலக சுகாதார நிறுவனமானது  ஐ.நா.வின் வளர்ச்சி குழுவின் (United Nations Development Group)  ஒரு உறுப்பினராகும்.
  • இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் அமைந்துள்ளது.
  • ஐ.நா.அவையின் சிறப்பு நிறுவனமான (specialized agency)  உலக சுகாதார நிறுவனமானது சர்வதேச பொது சுகாதாரத்தின் ஒருங்கிணைப்பு ஆணையமாக (coordinating authority)  செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்