ராஜஸ்தானில் மின் விநியோகத்துறை சீர்திருத்தங்களுக்காக 250 மில்லியன் டாலர் மதிப்புடைய வளர்ச்சி கொள்கைக்கான கடன் ஒப்பந்தம் ஒன்றில் உலக வங்கியுடன் மத்திய அரசாங்கமும் இராஜஸ்தான் மாநில அரசும் கையெழுத்திட்டு இருக்கின்றன.
இந்த கடனானது உலக வங்கியின் கடனளிப்புப் பிரிவான வளர்ச்சி மற்றும் மறுகட்டமைப்பிற்கான சர்வதேச வங்கியால் அளிக்கப்படும்.
திட்டம் ஆதரவளிக்கும் பகுதியான மாநில அரசிற்கும், மின் விநியோக நிறுவனங்களுக்கும் இடையேயான வருடாந்திர செயல்திறனுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் விநியோகத் துறையில் ஆளுகையை வலுப்படுத்துவது போன்ற முக்கிய பகுதிகள் அதில் உள்ளன.
மேலும் இது ஏழை மக்களுக்கு மின்சாரத்தை எளிதில் அணுகிடவும் பெற்றிடவும் ஏற்படுகின்ற பிரச்சினைகளையும் கூடுதலாக இந்திய அரசின் திட்டமான Domestic Efficient lighting program என்ற திட்டத்திற்கும் உதவிடும்.