TNPSC Thervupettagam

இந்தியா (எதிர்) அமெரிக்கா – WTOல் சூரிய ஒளித் தகடுகள் குறித்த வழக்கு

August 17 , 2019 1930 days 678 0
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அல்லது சூரிய ஒளித் துறை மீதான உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organization's - WTO) சமரசத்திற்கான  தீர்வுக் குழுவினால் இந்தியாவிற்கு ஆதரவாக வழங்கப்பட்ட தீர்ப்பானது அமெரிக்காவினால் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில், WTO குழுவானது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அமெரிக்க நிறுவனங்களுக்கு அந்நாட்டினால் வழங்கப்படும் மானியங்கள் சர்வதேச வர்த்தக விதிமுறைகளை மீறியுள்ளது என்றும் இந்தியாவின் நலனுக்கு எதிராக அது உள்ளது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
  • இந்த விதிமுறைத் தளர்வானது கட்டண வீதங்கள் மற்றும் வர்த்தகம் மீதான பொது ஒப்பந்தத்தின் (General Agreement on Tariffs and Trade - GATT) சில விதிகளுக்கு முரணாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
  • GATT ஆனது சுங்க வரிகள் போன்ற வர்த்தகத் தடைகளை ஒழிப்பது அல்லது அதைக் குறைப்பதன் மூலம் வர்த்தகத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தீர்ப்பு குறித்து WTOன் மேல்முறையீட்டு அமைப்பிடம் அமெரிக்கா மேல்முறையீடு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்