TNPSC Thervupettagam

இந்தியா குறித்து உலக வங்கி

April 16 , 2020 1688 days 701 0
  • 1991 ஆம் ஆண்டு தாராளமயமாக்கத்திற்குப் பிறகு, தற்போதைய நிதியாண்டில் இந்தியா தனது மோசமான பொருளாதார செயல்பாட்டைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரமானது 1.5 சதவிகிதம் முதல் 2.8 சதவிகிதம் வரையில் வளரும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • இந்த மெதுவான (குறைந்த) பொருளாதார வளர்ச்சி வீதமானது கொரானா வைரஸ் நோய்த் தொற்றின் திடீர்ப் பெருக்கத்தினால் ஏற்பட்டதாகும்.
  • உலக வங்கியானது இது குறித்தத் தகவலைத்  தனது தெற்காசிய பொருளாதாரக் கவன அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • இது 2019-20 ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரமானது 4.8 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக உயரும் என்று கணித்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்