TNPSC Thervupettagam

இந்தியா-சர்வதேச கடல்சார் அமைப்பு

December 3 , 2017 2577 days 1023 0
  • சர்வதேச கடல்சார் அமைப்பினுடைய (International Maritime Organisation – IMO) கவுன்சில் தேர்தலில் இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • “பி” வகைப்பாடு பிரிவில் நடந்த உறுப்பினர் தேர்தலில் இரண்டாவது அதிகபட்ச வாக்குகள் பெற்று அடுத்த இரண்டாண்டிற்கு உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • 144 வாக்குகள் பெற்று இந்தியா இரண்டாவது இடத்தையும், 146 வாக்குகள் பெற்று ஜெர்மனி முதலிடத்தையும் பெற்றது.
  • IMO அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து வகைப்பாடு - ‘B’- பிரிவுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.
  • இதற்குமுன் B பிரிவின் 10 உறுப்பினர்களும் ஒருமனதான ஆதரவு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • இந்தியா 1959ஆம் ஆண்டு முதல் IMO-வில் உறுப்பினராக இருந்து வருகின்றது.
  • 1983 – 1984 ஆகிய இரண்டு ஆண்டுகளைத் தவிர IMO தொடங்கப்பட்டது முதல் அதன் கவுன்சிலுக்கு உறுப்பினராக இந்தியா தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச கடல்சார் அமைப்பு
  • IMO 1948-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
  • இது 172 உறுப்பினர்களையும், 3 துணை உறுப்பினர்களையும் கொண்டது.
  • கடல்சார் விவகாரங்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உலகின் முதல் சர்வதேச அமைப்பு சர்வதேச கடல்சார் அமைப்பாகும்.
  • இங்கிலாந்தை தலைமையிடமாகக்  கொண்ட  ஐ.நா.அவையின் ஒரே சிறப்பு நிறுவனம்  சர்வதேச கடல்சார் அமைப்பாகும்.
  • இது கப்பல்துறை நிறுவனங்களுக்கான ஒழங்குமுறை கட்டமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் சர்வதேச போக்குவரத்துகளின் சுற்றுச்சூழல் செயல்திறன் மற்றும் கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் போன்றவற்றிற்கான தரநிலைகளை நிர்ணயிக்கும் உலக அமைப்பாகும்.
  • கடல்சார் பாதுகாப்பை அதிகரித்தல் மற்றும் கடல் மாசுபாடு அடைவதை தடுத்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.
  • இந்த அமைப்பில் மூன்று வகைப்பிரிவின் கீழ் உறுப்பினர்கள் உள்ளனர்.
  • வகைப்பாடு A : சர்வதேச கடல் போக்குவரத்து சேவைகளை அளிப்பதில்
ஆர்வமுடைய நாடுகள் இப்பிரிவில் இருக்கும். இதில் 10 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • வகைப்பாடு B : சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் ஆர்வமுடைய நாடுகள்
இவ்வகைப்பாட்டில் உள்ளன. இதில் 10 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • வகைப்பாடு C : கடற்வழிப் பயணத்தில் (navigation) சிறப்பு ஆர்வமுடைய நாடுகள்
இவ்வகைப்பாட்டில் உள்ளன. இதில் 20 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • B வகைப்பாட்டில் உள்ள இந்தியா A வகைப்பாட்டில் உறுப்பினராவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
  • A வகைப்பாட்டில் இந்தியா உறுப்பினரானால் IMO-வின் பல்வேறு குழுக்களில் பங்கேற்க வாய்ப்பு உண்டாகும்.
  • அதன் மூலம் IMO-வின் முடிவு எடுக்கும் செயல்பாட்டில் இந்தியா பங்கெடுக்க இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்