TNPSC Thervupettagam

இந்தியா சிறந்த நகரங்களுக்கான மாநாடு 2023

October 25 , 2023 250 days 336 0
  • 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் பொலிவுறு நகரங்களுக்கான மாநாடானது இந்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்தூர் நகரமானது 'சிறந்த பொலிவுறு நகரம்' என்ற மதிப்புமிக்க கௌரவத்தைப் பெற்றது.
  • இந்தியாவின் சிறந்த நகரங்களுக்கான விருதுகளில் குஜராத்தின் சூரத் இரண்டாவது இடத்தையும், உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
  • இம்மாநாட்டில் நாட்டின் சிறந்த மாநிலமாக மத்தியப் பிரதேசம் ஆனது தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • இதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை இணைந்து இதில் மூன்றாவது இடத்தைப் பிடித்தன.
  • நிதிச் செயல்பாடுகள், மாதிரிச் சாலைகள், ஏரிகள் புனரமைப்பு ஆகிய செயல்பாடுகளில் சிறப்பாகச் செயலாற்றியதற்காக மூன்று முதல் பரிசுகளை கோயம்புத்தூர் மாநகராட்சியானது பெற்றுள்ளது.
  • கலாச்சார மேம்பாடு மற்றும் நகரத்தின் வரலாற்றைப் பேணுதல் தொடர்பான திட்டங்களுக்காக மூன்றாம் பரிசினை தஞ்சாவூர் மாநகராட்சியானது பெற்றுள்ளது.
  • பள்ளிகளை எண்ம மயமாக்கியதற்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு மூன்றாம் பரிசானது கிடைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்