TNPSC Thervupettagam

இந்தியா – சீனா கடல்வழி விவகாரங்களுக்கான பேச்சுவார்த்தை

July 16 , 2018 2198 days 607 0
  • இந்தியா-சீனா ஆகியவற்றுக்கிடையேயான இடையேயான 2வது கடல்வழி விவகாரங்களுக்கான பேச்சுவார்த்தை சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் 13 ஜூலை 2018 அன்று நடைபெற்றது.
  • இருதரப்பும் தமது இரண்டாவது கடல்வழி பாதுகாப்புக்கான பேச்சுவார்த்தையினை நடத்தியபோது சிங்கப்பூரில் இந்த வருடம் நடைபெற்ற ஷாங்க்ரி லா உரையாடலில் பிரதம மந்திரி மோடியின் தலைமை உரையில் வெளிப்படுத்தியது போல இந்திய-பசிபிக் பகுதிகளில் இந்தியாவின் பார்வையை இந்திய தரப்பு விவரித்தது.
  • கடல்வழி பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு, நீலப் பொருளாதாரம் மற்றும் பயிற்சி ஒத்துழைப்பினை கூடுதலாக வலிமைப்படுத்துதல் ஆகியவற்றின் மீதான கண்ணோட்டங்களைக் கொண்ட வெவ்வேறு விஷயங்களின் மீதான பரஸ்பர ஆர்வத்தினை இரு தரப்புகளும் பரிமாறிக் கொண்டன.
  • தெற்கு சீனக்கடலில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் 2016-ம் ஆண்டு இரு நாடுகளும் கடல் வழி பாதுகாப்புக்கான பேச்சுவார்த்தையினை புது தில்லியில் தொடங்கின.
  • இந்த பேச்சுவார்த்தை கடந்த வருடம் (2017) நடைபெறவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்