TNPSC Thervupettagam

இந்தியா- சுவிட்சர்லாந்து இடையிலான 75 ஆண்டுகால நட்புறவு

October 17 , 2023 278 days 404 0
  • இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையிலான 75 ஆண்டுகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பினை கொண்டாடும் வகையில் உத்தரகாண்டிலுள்ள குமாவோன் கிராமத்தில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
  • 6,000 அடி உயரத்தில் அமைந்துள்ள சடோலி கிராமத்திலுள்ள ஒரு தங்கும் விடுதியில் கடந்த வாரம் ‘சுவிட்சர்லாந்து இமாலய வண்மை’ என்ற மூன்று நாட்கள் அளவிலான நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான நல்லுறவானது, 1948 ஆம் ஆண்டில் புது டெல்லியில் கையெழுத்தான நட்புறவு ஒப்பந்தத்திலிருந்து தொடங்கியது.
  • இரு நாடுகளுக்கும் இடையே கணிசமான அளவில் அந்நிய நேரடி முதலீடுகள் (FDI) மேற்கொள்ளப்படுவதைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள இந்தியாவின் முக்கிய  நட்பு நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து உருவெடுத்துள்ளது.
  • இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீட்டில் முன்னணியில் உள்ள 5 ஐரோப்பிய நாடுகளில், சுவிட்சர்லாந்தின் பங்கு 9.8 பில்லியன் டாலர்கள் ஆகும்.
  • இந்தியாவில் 323க்கும் மேற்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனங்கள் அமைந்து உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்