9-வது இந்தியா – ஜப்பான் ஆற்றல் உரையாடல் புதுதில்லியில் நடைபெற்றது.
மூன்றாவது மற்றும் ஏழாவது மிகப்பெரிய பொருளாதார நாடுகளான ஜப்பான் மற்றும் இந்தியா, பின்வருவனவற்றை கூட்டாக அங்கீகரித்துள்ளன.
நம்பகமான, தூய்மையான மற்றும் பொருளாதார ஆற்றலின் அணுகல் என்பது இவ்விரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான ஒன்று.
பருவநிலை மாறுபாடு மீதான ஐ.நா கட்டமைப்பு மாநாட்டின் ஆதரவின் கீழ் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை செயலாக்கம் செய்தல்
கார்பன் நீக்கத்தை (De-carbonisation) தெளிவாக உணர்வதற்காக ஹைட்ரஜன் உட்பட அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களின் உருவாக்கம் மற்றும் பயன்படுத்தலின் (deployment) முக்கியத்துவம்.
அடுத்த தலைமுறை / பூஜ்ஜிய உமிழ்வு (கரி) வாகனங்களின் மீதான கொள்கை பேச்சுவார்த்தைக்கு இசைவு அளிப்பதன் மூலம் மின்னணு வாகனங்களின் உருவாக்கத்தை நோக்கிய விவாதத்தை தொடங்குதல்.
இரு நாடுகளிலும் ஆற்றல் கலவையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியின் தொடர் முக்கியத்துவத்தை அறிவுறுத்தல்.
நிலக்கரி பயன்படுத்தும் ஆற்றல் நிலையங்களுக்கான (Coal – fired power plants) சுற்றுச்சூழல் அளவீடுகளின் மீதான கூட்டுறவை ஊக்குவித்தல்.
இலக்குக் கூறினை (Destination Clause) தளர்த்தல் மூலம் விரிவாக்கப்பட்ட மற்றும் வெளிப்படையான திரவ இயற்கை எரிவாயுவினை ஊக்குவித்தல்.