மத்திய அமைச்சரவையானது இந்தியா மற்றும் ஐப்பானுக்கிடையே இலகுவாக எளிதில் மாற்றியமைக்கும் தன்மையுடைய மற்றும் உலகலாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) சந்தையை நிறுவுவதில் புரிந்துணர்வு ஒத்துழைப்பு (Memorandum Of Cooperation)ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.
இலகுவாக்கும் தன்மையை எளிதாக்க ஒத்துழைக்கும் வகையில் உள்ள கட்டமைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்குகிறது.
இந்தியாவும் மற்றும் ஜப்பானும் உலகின் மிகப்பெரிய எரிசக்தி நுகர்வோர்கள் ஆவர். LNG பிரிவில் உலகின் பெரிய இறக்குமதி நாடாக ஜப்பானும், நான்காவது பெரிய இறக்குமதி நாடாக இந்தியாவும் உள்ளது.
எரிசக்தி துறையில் இந்தியா மற்றும் ஜப்பானுடனான இருநாட்டு உறவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உயர்த்தும். மேலும் இது இந்தியாவிற்கு எரிவாயு வழங்கும் நாடுகளை அதிகப்படுத்துவதோடு நாட்டின் எரிசக்தி பாதுகாப்புத் திறனையும் பலப்படுத்தும்.