இந்தியா ஜெர்மனியிடமிருந்து 277 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ 1,900 கோடி) மதிப்பிலான கடனைப் பெற்றுள்ளது.
நாட்டில் எரிசக்தித் திறன் கொண்ட வீட்டுவசதித் திட்டத்தை நிறுவ இந்தியா இந்தக் கடனைப் பயன்படுத்த இருக்கின்றது.
இந்த திட்டமானது இந்திய - ஜெர்மன் மேம்பாட்டு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இருக்கும்.இது 2030 ஆம் ஆண்டின் நிலையான வளர்ச்சி இலக்கின் செயல் திட்டத்தால் வழி நடத்தப்படுகின்றது.
இந்த கடன் ஒப்பந்தமானது பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஜெர்மனியின் KfW மேம்பாட்டு வங்கி ஆகியவற்றிற்கு இடையே கையெழுத்தானது.