TNPSC Thervupettagam

இந்தியா டுடே இதழின் சிறந்த மாநிலங்களுக்கானப் பட்டியல்

December 18 , 2022 582 days 391 0
  • இந்தியா டுடே இதழின் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களுள் தொடர்ந்து 5வது ஆண்டாக தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டின் முடிவிலும், மாநிலங்களின் செயல்திறன் குறித்த தரவரிசைப் பட்டியலை இந்தியா டுடே இதழ் வெளியிடுகிறது.
  • பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, கல்வி, உள்கட்டமைப்பு, சட்டம் & ஒழுங்கு, சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய பிரிவுகளின் கீழ் பல்வேறு மாநிலங்களை பெரிய மற்றும் சிறிய மாநிலங்களாக இந்த நிறுவனம் பட்டியலிடுகிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 1303.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
  • 2018, 2019, 2020, 2021 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.
  • அதைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • குஜராத், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை முறையே 4வது, 5வது மற்றும் 6வது இடங்களில் உள்ள மாநிலங்கள் ஆகும்.
  • பொருளாதார மேம்பாட்டில் குஜராத் முன்னணியில் உள்ளது.
  • கடந்த ஆண்டு அந்தப் பிரிவில் 4வது இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டு 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • மருத்துவப் பிரிவில் கடந்த ஆண்டு 5வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு முன்னேறிய தமிழக மாநிலமானது சுகாதாரத்தில் கடந்த ஆண்டில் இருந்த 7வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • சிறந்த உள்கட்டமைப்பின் அடிப்படையில் கடந்த ஆண்டில் 4வது இடத்தில் இருந்த தமிழகம் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்