15-வது இந்தியா டுடே மாநிலங்களில் சிறந்த மாநில விருதுகள் 2018-ஐ இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் புது டெல்லியில் வழங்கினார்.
கீழ்க்காணும் பிரிவுகளில் சிறந்த செயலாக்கத்திற்கான விருதினை தமிழ்நாடு பெற்றது.
ஒட்டுமொத்த செயல்பாடு
சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும்
சுற்றுலாத் துறை
தமிழ்நாடானது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மாநில பொருளாதாரமாக உருவாகியுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.4% பங்களிப்பை அளிக்கிறது.
இந்தியா டுடேயின் மாநிலங்களில் சிறந்த மாநில கணக்கெடுப்பு 2018 ஆனது முன்னணி ஆராய்ச்சி நிறுவனமான MDRA (Marketing and Development Research Associates) என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்டது.