2023 ஆம் ஆண்டானது, இந்தியா - கத்தார் மற்றும் இந்தியா-தென் கொரியா ஆகியவற்றுக்கு இடையேயான முழு அரசுமுறை உறவுகள் நிறுவப்பட்டதன் 50 ஆண்டு நிறைவினை (1973 ஆம் ஆண்டு முதல்) குறிக்கிறது.
புத்தமதம் ஆனது இந்தியாவில் இருந்து 3 ஆம் நூற்றாண்டில் இருந்த மூன்று பேரரசுகளின் காலத்தில் கொரியத் தீபகற்பத்தை அடைந்தது.
1945 ஆம் ஆண்டில் கொரியா சுதந்திரம் பெற்ற பிறகு, கொரிய நாட்டு விவகாரங்களில் இந்தியா ஒரு முக்கியமான மற்றும் நேர்மறையான பங்கினைக் கொண்டிருந்தது.
கொரியாவில் தேர்தலை நடத்தச் செய்வதற்காக 1947 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட 9 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் தலைவராக இந்தியாவின் திரு. K.P.S. மேனன் பணியாற்றினார்.
கொரியப் போரின் போது (1950-53), போரில் ஈடுப்பட்ட இரு நாட்டுத் தரப்பினரும் இந்தியாவால் முன்மொழியப்பட்ட ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டன.
அதனைத் தொடர்ந்து 1953 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதியன்று போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டது.
1962 ஆம் ஆண்டில் இருநாடுகளிடையே இருதரப்புப் பிரதிநிதிகள் சார்ந்த உறவுகள் நிறுவப் பட்டு அவை 1973 ஆம் ஆண்டில் தூதரக உறவுகள் என்ற நிலைக்கு உயர்த்தப் பட்டன.
1974 ஆம் ஆண்டில் வர்த்தக மேம்பாடு, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த 2006 ஆம் ஆண்டு தென் கொரியாவுக்கு வருகை தந்தார்.
இதன் விளைவாக 2010 ஆம் ஆண்டில் செயலாக்கப்பட்ட ஒரு கூட்டு பணிக்குழு உருவாக்கப் பட்டது.
2010 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக அப்போதைய அதிபர் லீ இந்தியாவிற்கு வருகை தந்தார்.
இந்தியாவில் கொரிய முதலீடுகளை ஊக்குவிக்கச் செய்வதற்காகவும், மேம்படுத்தச் செய்வதற்காகவும் இந்தியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து 2016 ஆம் ஆண்டில் ‘கொரியா பிளஸ்’ என்ற முன்னெடுப்பினைத் தொடங்கின.
தென் கொரிய அரசானது, 2016 ஆம் ஆண்டில் இந்தியப் பாதுகாப்பு உபகரணங்கள் கண்காட்சி மற்றும் கடல்சார் இந்திய உச்சி மாநாட்டில் பங்கேற்றது.
இருநாடுகளின் இருதரப்பு உறவு ஆனது 2018 ஆம் ஆண்டில் ஒரு சிறப்பு உத்திசார் கூட்டாண்மை என்ற நிலைக்கு மேம்படுத்தப்பட்டது.
2022 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் ஆனது 27.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பினை எட்டியது.