TNPSC Thervupettagam

இந்தியா-தென்கொரியா இடையிலான அரசுமுறை உறவுகள்

February 14 , 2023 524 days 250 0
  • 2023 ஆம் ஆண்டானது, இந்தியா - கத்தார் மற்றும் இந்தியா-தென் கொரியா ஆகியவற்றுக்கு இடையேயான முழு அரசுமுறை உறவுகள் நிறுவப்பட்டதன் 50 ஆண்டு நிறைவினை (1973 ஆம் ஆண்டு முதல்) குறிக்கிறது.
  • புத்தமதம் ஆனது இந்தியாவில் இருந்து 3 ஆம் நூற்றாண்டில் இருந்த மூன்று பேரரசுகளின் காலத்தில் கொரியத் தீபகற்பத்தை அடைந்தது.
  • 1945 ஆம் ஆண்டில் கொரியா சுதந்திரம் பெற்ற பிறகு, கொரிய நாட்டு விவகாரங்களில் இந்தியா ஒரு முக்கியமான மற்றும் நேர்மறையான பங்கினைக் கொண்டிருந்தது.
  • கொரியாவில் தேர்தலை நடத்தச் செய்வதற்காக 1947 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட 9 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் தலைவராக இந்தியாவின் திரு. K.P.S. மேனன் பணியாற்றினார்.
  • கொரியப் போரின் போது (1950-53), போரில் ஈடுப்பட்ட இரு நாட்டுத் தரப்பினரும் இந்தியாவால் முன்மொழியப்பட்ட ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டன.
  • அதனைத் தொடர்ந்து 1953 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதியன்று போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டது.
  • 1962 ஆம் ஆண்டில் இருநாடுகளிடையே இருதரப்புப் பிரதிநிதிகள் சார்ந்த உறவுகள் நிறுவப் பட்டு அவை 1973 ஆம் ஆண்டில் தூதரக உறவுகள் என்ற நிலைக்கு உயர்த்தப் பட்டன.
  • 1974 ஆம் ஆண்டில் வர்த்தக மேம்பாடு, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த 2006 ஆம் ஆண்டு தென் கொரியாவுக்கு வருகை தந்தார்.
  • இதன் விளைவாக 2010 ஆம் ஆண்டில் செயலாக்கப்பட்ட ஒரு கூட்டு பணிக்குழு உருவாக்கப் பட்டது.
  • 2010 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக அப்போதைய அதிபர் லீ இந்தியாவிற்கு வருகை தந்தார்.
  • இந்தியாவில் கொரிய முதலீடுகளை ஊக்குவிக்கச் செய்வதற்காகவும், மேம்படுத்தச் செய்வதற்காகவும் இந்தியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இணைந்து 2016 ஆம் ஆண்டில் ‘கொரியா பிளஸ்’ என்ற முன்னெடுப்பினைத் தொடங்கின.
  • தென் கொரிய அரசானது, 2016 ஆம் ஆண்டில் இந்தியப் பாதுகாப்பு உபகரணங்கள் கண்காட்சி மற்றும் கடல்சார் இந்திய உச்சி மாநாட்டில் பங்கேற்றது.
  • இருநாடுகளின் இருதரப்பு உறவு ஆனது 2018 ஆம் ஆண்டில் ஒரு சிறப்பு உத்திசார் கூட்டாண்மை என்ற நிலைக்கு மேம்படுத்தப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் ஆனது 27.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பினை எட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்