இந்தியா-நார்வே கடல் மாசுபாடு முன்னெடுப்பு (INMPI) என்பது நீலக்கடல் குப்பைகள் மற்றும் நுண் நெகிழிகள் (MPs) போன்ற மாசுபாடுகளை அகற்றுவதற்காக இந்தியா மற்றும் நார்வே நாட்டு அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய இருதரப்பு முன்னெடுப்பாகும்.
இது 2019 ஆம் ஆண்டில் இந்தியா-நார்வே பெருங்கடல் மீதானப் பேச்சுவார்த்தையின் கீழ் தொடங்கப் பட்டது.
நிலப்பரப்புகளில் கடல்சார் நெகிழி மாசுபாட்டைக் குறைப்பதற்குப் பல திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
தற்போது, பூசணிக்காய் சார்ந்த உணவுப் பொருள் தயாரிப்புக் கழிவுகள் மற்றும் காலணி உற்பத்திக் கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஏற்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகளுடன், ஆக்ராவின் கழிவு சுழற்சியை மேம்படுத்தவும், யமுனை ஆற்றில் நெகிழிக் கழிவுக் கசிவைக் குறைக்கவும் INMPI உதவியுள்ளது.