நேபாளத்திற்கு கூடுதலாக 251 மெகாவாட் மின்சாரத்தினை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா அனுமதித்துள்ளது.
நேபாளத்தில் உள்ள 12 நீர்மின் நிலையங்களில் இருந்து கூடுதலாக 251 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்வதற்கு, எல்லை கடந்த வர்த்தகத்திற்காக நியமிக்கப்பட்ட இந்திய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், நேபாளம் 28 நீர்மின் நிலையங்களில் இருந்து 941 மெகாவாட் நீர் மின் ஆற்றலை ஏற்றுமதி செய்யும்.
முன்னதாக, நேபாளம் 16 நீர்மின் நிலையங்களில் இருந்து 690 மெகாவாட் மின் ஆற்றலை ஏற்றுமதி செய்து வந்தது.
நேபாள நாட்டு அரசானது ஏற்கனவே கடந்த நிதியாண்டில் நிகர மின்சார ஏற்றுமதி செய்யும் நாடாகவும், நிகர வருவாய் ஈட்டும் நாடாகவும் மாறியுள்ளது.
இந்தியாவும் நேபாளமும் அடுத்த 10 ஆண்டுகளில் நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு 10,000 மெகாவாட் வரை மின்சாரம் விற்பனை செய்வதற்காகத் திட்டமிடப்பட்ட நீண்ட கால மின் வர்த்தகத்திற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
நேபாள நாடானது சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரக்காண்ட் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களுடன் 1,850 கிலோ மீட்டருக்கும் மேலான எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.