TNPSC Thervupettagam

இந்தியா - பாகிஸ்தான் கடலோரக் காவல்படையினரின் பேச்சுவார்த்தை

June 2 , 2018 2368 days 685 0
  • இந்தியக் கடலோரக் காவல்படையும் பாகிஸ்தானின் கடலோர பாதுகாப்பு நிறுவனமும் இரு தரப்பு மீனவர்களாலும் மீறப்படும் எல்லை மீறல் பிரச்சினைகளையும், கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதைப் பற்றியும் கடல்பகுதியில் மாசுக்கட்டுப்பாட்டை மேற்கொள்வது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • இந்த உயர் அலுவல் சந்திப்பு 2005ம் ஆண்டு இரு தரப்பு அமைப்புகளாலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிகளின் படி நடத்தப்பட்டது.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2016ம் ஆண்டு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
  • இந்த முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர சந்திப்பு கடந்த ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய சிறப்புப் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதல்களாலும், 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ்விற்கு பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததாலும் சென்ற ஆண்டு நடத்தப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்