இரு நாடுகளுடைய போர் கப்பல்களுக்கு பரஸ்பரம் தங்களுடைய கடற்தளத்தை பயன்படுத்த அனுமதியளிப்பது உட்பட தங்களுடைய பிற இராணுவ வசதிகளை இருநாடுகளும் மாறிமாறி பயன்படுத்திக் கொள்ள இந்தியா மற்றும் பிரான்ஸ் ஓர் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
பிரான்ஸ் உடனான இந்த ஒப்பந்தமானது, இருநாடுகளும் தங்களது வான், நில, கடற்தளங்களை பரஸ்பரம் மாறிமாறி பயன்படுத்திக் கொள்ள, இந்தியா அமெரிக்காவுடன் மேற்கொண்ட இராணுவ பண்டக ஆதரவு ஒப்பந்தமான LEMOA (Logistics Exchange Memorandum Of Agreement) ஒப்பந்தத்தை ஒத்ததாகும்.
இந்தியப் பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடலில் நிலைத்தன்மை மற்றும் அமைதியை உறுதி செய்ய முன்னெப்போதுமில்லாத அளவிலான வலுவான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் கடல்சார் பாதுகாப்பு களத்தில் மேற்கொள்ள உள்ளன.