TNPSC Thervupettagam

இந்தியா-மத்திய ஆசியா பேச்சுவார்த்தை

November 2 , 2020 1397 days 619 0
  • சமீபத்தில், இந்தியா-மத்திய ஆசியா பேச்சுவார்த்தையின் இரண்டாவது கூட்டத்தை இந்தியாவானது இணைய வழியில் நடத்தியது.
  • தற்போது மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியாவானது கூடுதலாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு கடன் வரம்பை நீட்டித்துள்ளது.
  • இந்தப் பேச்சுவார்த்தையின் முதல் கூட்டமானது 2019 ஆம் ஆண்டின் ஜனவரியில் உஸ்பெகிஸ்தான் குடியரசின் சமர்கண்டில் நடத்தப் பட்டது.
  • இது இந்தியாவிற்கும் மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் இடையிலான அமைச்சர்கள் அளவிலான ஒரு பேச்சுவார்த்தையாகும்.
  • பனிப் போருக்குப் பின்பு, 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்த ஐந்து நாடுகளும் சுதந்திர நாடுகளாக உருவெடுத்தன.
  • துர்க்மெனிஸ்தானைத் தவிர இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்