TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தை 2023

September 12 , 2023 312 days 180 0
  • இந்தியப் பிரதமர் அவர்கள், அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் புது டெல்லியில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
  • 2024 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் நடத்தப்பட உள்ள, குவாட் அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் தலைவர்களின் அடுத்த உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அமெரிக்க அதிபருக்கு இந்தியா அழைப்பு விடுத்தது.
  • 1 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளுடன் (தலா 500 மில்லியன் டாலர்) புதுப்பிக்கத் தக்க ஆற்றலுக்கான உள்கட்டமைப்பு முதலீட்டு நிதியத்தை அமைக்கச் செய்வதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
  • இரு நாடுகளும் தங்களது உலக வர்த்தக அமைப்பின் (WTO) கீழ் நிலுவையில் உள்ள கோழி இறைச்சி குறித்த பிரச்சனையைத் தீர்த்து கொள்வதாக அறிவித்தன.
  • இந்திய அரசானது, அமெரிக்க நாட்டு உற்பத்திப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைப்பதற்கும் ஒப்புக்கொண்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் பின்வருவபவை உள்ளடங்கும்: உறைந்த வான்கோழி இறைச்சி, உறைந்த வாத்து இறைச்சி மற்றும் புதிய, உறைந்த, உலர்ந்த மற்றும் பதப்படுத்தப் பட்ட அவுரி நெல்லிகள்(ப்ளூ ஃப்பெரி) மற்றும் குருதி நெல்லிகள் (கிரான் ஃப்பெரி).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்