இந்தியப் பிரதமர் அவர்கள், அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் புது டெல்லியில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
2024 ஆம் ஆண்டில் இந்திய அரசினால் நடத்தப்பட உள்ள, குவாட் அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் தலைவர்களின் அடுத்த உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அமெரிக்க அதிபருக்கு இந்தியா அழைப்பு விடுத்தது.
1 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளுடன் (தலா 500 மில்லியன் டாலர்) புதுப்பிக்கத் தக்க ஆற்றலுக்கான உள்கட்டமைப்பு முதலீட்டு நிதியத்தை அமைக்கச் செய்வதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
இரு நாடுகளும் தங்களது உலக வர்த்தக அமைப்பின் (WTO) கீழ் நிலுவையில் உள்ள கோழி இறைச்சி குறித்த பிரச்சனையைத் தீர்த்து கொள்வதாக அறிவித்தன.
இந்திய அரசானது, அமெரிக்க நாட்டு உற்பத்திப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைப்பதற்கும் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தப் பட்டியலில் பின்வருவபவை உள்ளடங்கும்: உறைந்த வான்கோழி இறைச்சி, உறைந்த வாத்து இறைச்சி மற்றும் புதிய, உறைந்த, உலர்ந்த மற்றும் பதப்படுத்தப் பட்ட அவுரி நெல்லிகள்(ப்ளூ ஃப்பெரி) மற்றும் குருதி நெல்லிகள் (கிரான் ஃப்பெரி).