TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் எகிப்து இடையேயான அரசுமுறை உறவுகளின் 75வது ஆண்டு விழா

August 27 , 2022 696 days 317 0
  • இந்தியாவுடனான அரசுமுறை உறவுகளின் 75வது ஆண்டு நிறைவின் நினைவாக எகிப்து அரசு நினைவு தபால்தலையை வெளியிட்டது.
  • 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று, எகிப்து அரசு இந்தியாவின் சுதந்திரத்தை அங்கீகரித்த போது இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான அரசு முறை உறவுகள் தொடங்கியன.
  • 1950 ஆம் ஆண்டுகளில் இந்த இரு நாடுகளும் நெருக்கமானதன் விளைவாக 1955 ஆம் ஆண்டில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நட்பு ஒப்பந்தம் ஏற்பட்டது.
  • தற்போது 3.15 பில்லியன் அமெரிக்க டாலர்கள்  மதிப்பிலான இந்திய முதலீட்டுடன் இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கான மிகப்பெரிய முதலீட்டுத் தளங்களில் எகிப்து நாடும் ஒன்றாகும்.
  • 1960 ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு வளர்ச்சி பெற்றது
  • இந்தியாவும் எகிப்தும் இணைந்து ஹெலன்-300 ஜெட் என்ற போர் விமானத்தைத் தயாரித்தன.
  • இந்திய-எகிப்து கூட்டு பாதுகாப்புக் குழுவானது 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • அதன் பிறகு, இந்தக் குழு ஆறு முறை கூடியுள்ளது.
  • இந்தியாவும் எகிப்தும் இணைந்து டெசெர்ட் வாரியர் என்ற இருதரப்பு இராணுவப்  பயிற்சியையும் ஏற்பாடு செய்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்