TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் கார்பன் வெளியேற்றம்

December 6 , 2018 2052 days 610 0
  • 2017 ஆம் ஆண்டிலிருந்து கார்பன் வெளியேற்றமானது3 சதவீதம் அதிகரித்து, அதன் பங்களிப்பில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுக்க இருக்கின்றது.
  • 2018 ஆம் ஆண்டில் உலக கார்பன் வெளியேற்றமானது எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மிக அதிக அளவாக 37.1 பில்லியன் டன்கள் கார்பன்-டை-ஆக்சைடு  வெளியேற்றம் என்ற இலக்கை அடைய இருக்கின்றது.
  • 2018 ஆம் ஆண்டில் உலக அளவில் கார்பன் வெளியேற்றமானது 2.7 சதவீதமாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நிலக்கரி, வாயு மற்றும் எண்ணெய் வளங்கள் ஆகியவற்றின் நீடித்த பயன்பாட்டின்  மூலம் ஏற்படுகிறது.
  • இந்த ஆய்வானது கிழக்கு அங்கிலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சர்வதேச கார்பன் திட்டம் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.
  • சீனா, அமெரிக்கா, இந்தியா, இரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, ஈரான், சவுதி அரேபியா, தென் கொரியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் 2018 ஆம் ஆண்டில் கார்பன் வெளியேற்றத்தில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்